சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் மே 9ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்திற்குச் சிறப்பு பேட்டியளித்த போது பாராட்டினார்.
பயணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, சீன-ஹங்கேரி உறவை பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவிலிருந்து புதிய யுகத்தில் அனைத்துக் கால நிலைகளிலும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதை அறிவித்தனர்.
இரு நாடுகளுக்கிடையே அரசியல் துறையில் பரஸ்பர நம்பிக்கை, நெடுநோக்குத் துறையில் ஒத்த கருத்து, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை புதிய நிலைக்கு இது எடுத்துச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
பயணத்தின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், தத்தமது மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனங்களுக்கு இரு தரப்பும் தொடர்ந்து ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளிக்கும். இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்களின் இணைப்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்களை வலுப்படுத்தி சர்வதேச நீதி மற்றும் நியாயத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இவை அடுத்த கட்டத்தில் சீன-ஹங்கேரி உறவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, சீன-ஹங்கேரி உறவு புதிய கட்டத்திற்கு வந்துள்ளது. தத்தமது நவீனமயமாக்கும் போக்கில் இரு தரப்பும் மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, கூட்டு வளர்ச்சி மற்றும் கூட்டு செழுமையை நனவாக்குவதோடு, சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பை வழிநடத்தவும் பாடுபடும்.