உயர்தர வளர்ச்சி, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கான முதன்மை பணி

சீனாவின் நவீனமயமாக்கம், மிகக் கடினமான மற்றும் மகத்தான பணியாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் போது விளக்கிக் கூறினார்.
புதிய வளர்ச்சி கருத்தை முழுமையாகவும் சரியாகவும் நடைமுறைப்படுத்தி, புதிய வளர்ச்சி கட்டமைப்பின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியின் மூலம் சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதில் பல்வேறு இடங்களுக்கு வழிகாட்டும் விதம், இவ்வாண்டு முதல், ஷி ச்சின்பிங் பலமுறை முக்கிய கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியதோடு, பல இடங்களிலும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களைச் சார்ந்து உயர்தர வளர்ச்சியை நனவாக்குவது, உண்மை பொருளாதாரத்தை ஆதாரத்தூணாகக் கொண்டு நடைமுறையில் முன்னேற்றம் அடைவது, மேலும் உயர் நிலையிலான திறப்புத் தன்மையுடைய புதிய பொருளாதார அமைப்புமுறையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு சீனா பாடுபட்டு வருகிறது.
உலக மயமாக்கத்துக்கு எதிரான சிந்தனையைச் சந்தித்தாலும், உயர்நிலை திறப்புக் கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றி, முன்முயற்சியுடன் பொருளாதார சுழற்சியிலுள்ள சிக்கல்களைத் தீர்த்து, அமைப்புமுறை சார் மேம்பாடுகளுடன் உயர்தர வளர்ச்சிக்கான இயக்காற்றலை அதிகரித்து வருகிறது.
எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு குறித்து, இலக்கு மற்றும் திட்ட வரைவுகளைக் கொண்டுள்ள சீனாவின் நவீனமயமாக்கம் கண்டிப்பாக நனவாக்கப்படும். இதற்காக சீனா படிப்படியாக முன்னேறி வருகிறது என்று ஷி ச்சின்பிங் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author