இந்தியாவின் மினெர்வா அகாடமியின் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணி, சர்வதேச கால்பந்து அரங்கில் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
ஸ்வீடனில் நடைபெற்ற மதிப்புமிக்க கோதியா கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசிலின் ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் யெல்லோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மினெர்வா அகாடமி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக இளைஞர் கால்பந்து மகுடத்தைத் தற்காத்துக் கொண்டுள்ளது.
கோதியா கோப்பை கால்பந்து 2026: பிரேசிலை வீழ்த்தி இந்திய அணி உலகளாவிய வரலாற்று சாதனை
