மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தற்பொழுது யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நடத்தப்படும் சிறப்பு மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான 1,000 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் மொத்தம் 10 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா…? மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
