சீன ஊடக குழுமம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், மத்திய இணையவெளி விவகார ஆணையத்தின் அலுவலகம், ஷாங்காய் மாநகரின் மக்கள் அரசு ஆகியவை கூட்டாக நடத்திய 2026ஆம் ஆண்டு சீன ஏஐ விழா மற்றும் உலகளாவிய அறிவார்ந்த நலனுக்கான தளத்தின் ஏஐ தரவுத்தொகுப்பு பயன்பாட்டு ஒத்துழைப்புப் பட்டியல் வெளியிடும் விழா, ஜுலை 18ஆம் நாள் ஷாங்காயில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும், சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங் இதில் உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரை, உலகளாவிய ஏஐ வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கு வழிகாட்டி, சர்வதேச சமூகத்தின் வலுவான மறுமொழியைப் பெற்றுள்ளது என்றார். 2026 சீன ஏஐ விழா நடைபெறுவது, ஷிச்சின்பிங் உரையின் குறிக்கோளை ஆழமாக செயல்படுத்துவதற்கும், ஏஐ வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் முன்முயற்சியை எடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட நடைமுறையாகும் என்று தெரிவித்தார்.
அடிப்படை ஆராய்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில்துறை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சீனாவின் புதிய ஏஐ சாதனைகள், 2026 சீன ஏஐ விழாவில் காட்சிப்படுத்தப்படும். ஷாங்காய் மாநகரின் அரசு மற்றும் பல்வேறு கூட்டாளிகளின் ஆதரவுடன், சீன ஊடக குழுமமும், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் உலகளாவிய அறிவார்ந்த தளத்தின் கட்டுமானத்தை தொடங்கி, சீனப் பாணியுடைய ஏஐ வளர்ச்சி பாதையை உலகிற்கு வெளிப்படுத்தி, சீன ஞானம் உலகிற்கு சிறப்பாக பயனளிக்க துணை புரியும் என்றும் தெரிவித்தார்.
