2025ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடு அடைந்ததாக சீன அரசு ஜனவரி 19ஆம் நாள் தெரிவித்தது. இது குறித்து ஐக்யூஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபிராங்க் ஹாம் கூறுகையில், சிக்கலான வெளிப்புற சூழல்களுக்கிடையில், சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்தது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயனுள்ள வாய்ப்பளித்துள்ளது என்றார்.
2025ஆம் ஆண்டு, சீனாவின் 14வது ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடைந்தது. மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு முதன்முறையாக 1 கோடியே 40 லட்சம் கோடி யுவானை எட்டியது. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகள் வெற்றிகரமாக நனவாக்கப்பட்டுள்ளன. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம், உலகளவில் முன்னணியில் உள்ளது. மேலும், இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக நிதானமான இயக்காற்றலாக விளங்குகிறது. அண்மையில், சில முக்கிய சர்வதேச அமைப்புகள், சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டை உயர்த்தியுள்ளதோடு, சீனப் பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலத்துக்கு சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டிருப்பதையும் இது வெளிகாட்டியது.
சீனாவில் புத்தாக்கத்தின் மூலம் வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற நெடுநோக்கு திட்டம், சீன அரசு மேற்கொண்ட சரியான கொள்கைகள் ஆகியவை, இச்சாதனைக்கு காரணங்களாகும் என்று சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் வாங் சியௌசுன் தெரிவித்தார்.
உலகத்தின் 2வது பெரிய பொருளாதாரமாக, சீனப் பொருளாதாரத்தின் நிதானமான வளர்ச்சி, உலகளாவிய வளர்ச்சியின் ஒரு முக்கிய காரணியாகும். ஜெர்மனியின் KSB நிறுவனத்தின் வடக்கு ஆசியப் பிரதேசத் தலைமை இயக்குநர் கூறுகையில், சீனாவின் பெரிய சந்தை, பூரணமான தொழில்துறை உதவி வசதிகள் மற்றும் விநியோக சங்கிலி, திறப்பான கொள்கைகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக, 2025ஆம் ஆண்டு KSB நிறுவனத்தின் விற்பனை வருமானம் 2024ஆம் ஆண்டை விட 4.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார்.
தற்போது உலக அளவில் நிலவி வரும் பதற்றமான புவியமைவு அரசியல் சூழல், வர்த்தக பாதுகாப்புவாதம் ஆகியவற்றுக்கிடையில், சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி என்ற அடிப்படை போக்கு மாறாது. 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவுக் காலத்தில், சீனப் பொருளாதார வளர்ச்சியின் மேம்பாடுகள் மேலும் வெளிப்படுத்தப்படும்.
