சீனா-ரஷியா இடையே உத்திப்பூர்வ நிலைத்தன்மை பற்றிய புதிய சுற்று கலந்தாய்வு

 

சீனா-ரஷியா இடையே உத்திப்பூர்வ நிலைத்தன்மை பற்றிய புதிய சுற்று கலந்தாய்வுக்கு, சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் லியூ பின், ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் லியூபாகோவ் ஆகியோர் பிப்ரவரி 3ஆம் நாள் பெய்ஜிங்கில் கூட்டாக தலைமை தாங்கினர். தற்போதைய உலகளாவிய உத்திப்பூர்வ நிலைத்தன்மை பற்றியும் பலதரப்பு படைக்கலக் கட்டுப்பாடு குறித்தும் இருதரப்பும் ஆழ்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பரந்தளவில் உடன்பாடுகளை எட்டியுள்ளன.

தற்போதைய உலகளாவிய உத்திப்பூர்வ நிலைத்தன்மை கடும் சவால்களை எதிர்நோக்குகிறது என்று இருதரப்பும் உடன்பட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகத் திகழும் சீனாவும் ரஷியாவும், உத்திநோக்கு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தை உறுதியுடன் ஆதரித்து, உலகளாவிய உத்திப்பூர்வ நிலைத்தன்மையைப் பேணிக்காக்கவும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் பங்காற்றும் என்றும் தெரிவித்துள்ளன.

You May Also Like

More From Author