2026ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலக ஏஐ நிர்வாகம் பற்றிய உயர்நிலை கூட்டம் ஜூலை 18ஆம் நாள் ஷாங்காயில் நடைபெற்றது. இதில், உலகளாவிய ஏஐ நிர்வாக சவால்களைச் சமாளிப்பது, ஏஜ தொழில்நுட்பங்களின் பொது நலன் மற்றும் பகிர்வை மேம்படுத்துவது, ஏஐ பாதுகாப்பு அபாயங்களைத் தடுப்பது ஆகியவை குறித்து அரசு வாரியங்களின் பிரதிநிதிகள் பலர் விவாதம் நடத்தினர்.
உலகளவில் பொது நலனுக்கான வளர்ச்சியை ஏஐ நனவாக்க முடியுமா என்பது, உண்மையான பலதரப்புவாதத்தை செயல்படுத்த முடியுமா என்பதை சார்ந்திருக்கிறது என்று இக்கூட்டத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் தெரிவித்தனர். இதனிடையே, உலகளாவிய ஏஐ நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தக் கூடிய தன்மையை உறுதி செய்வது பற்றியும் அவர்கள் முக்கியமாக விவாதம் நடத்தினர்.
ஏஐ நிர்வாகம் பற்றிய உலகளாவிய உரையாடல், சர்வதேச ஏஐ அறிவியல் குழு ஆகிய 2 ஐ.நா. இயங்குமுறைகள் பங்களிப்பதை ஆதரிக்கவும், சர்வதேச பொது தயாரிப்புகளை அதிகமாக வழங்கவும், உலகளாவிய தெற்கு நாடுகள் தங்கள் திறனை வளர்ப்பதற்கு உதவியளிக்கவும், பரந்த அளவில் ஒத்த கருத்துடன் கூடிய உலகளாவிய ஏஐ நிர்வாக கட்டமைப்பின் உருவாக்கத்தை முன்னேற்றவும் வேண்டும் என்று சீனத் தரப்பினர் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்து, ஆக்கப்பூர்வ மறுமொழியைப் பெற்றனர்.
