பிரிட்டிஷ் எஃகு நிறுவனத்தின் அரசுடைமையாக்கம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் பதில்

எஃகு தொழில் அரசுடைமையாக்கம் மசோதாவின்படி பிரிட்டிஷ் எஃகு நிறுவனத்தை அரசுடைமையாக்கம் செய்து, முன்பு சீனாவின் ஜிங்யே குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாவும், துணை நிலை சட்டமியற்றல் மூலம் இழப்பீட்டு இயங்குமுறையை நிறுவி, சுதந்திர மதிப்பீட்டுடன் இழப்பீடு தேவையா என்பதை தீர்மானிக்கும் என்றும் பிரிட்டிஷ் அரசு ஜூலை 16ஆம் நாள் அறிவித்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 18ஆம் நாள் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீன மக்களிடையில் இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும், இவ்விவகாரத்தை பிரிட்டன் எவ்வாறு கையாள்கிறது என்பது, பிரிட்டனிலுள்ள முதலீட்டு சூழ்நிலை பற்றியும், பிரிட்டிஷ் அரசின் நம்பகத்தன்மை பற்றியும் சீன முதலீட்டாளர்கள் கொண்டுள்ள கருத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சீனாவும் பிரிட்டனும் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கையை உருவாக்கியுள்ளன. முதலீட்டாளர்களின் நியாயமான உரிமை நலன்கள் சட்டப்படி முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பிரிட்டிஷ் தரப்பு சந்தை கொள்கையையும் ஒப்பந்த உணர்வையும் மதித்து, இருதரப்புகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுமுறையைக் காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author