சீனத் திபெத்தியல் ஆய்வு பற்றிய கலந்துரையாடல் கூட்டம்

சீனத் திபெத்தியல் ஆய்வு மற்றும் சிட்சாங் தொடர்பான உயர்நிலைச் சிந்தனைக் கிடங்குகளின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான கலந்துரையாடல் கூட்டம் ஜுன் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், ஐக்கிய முன்னணி விவகார அமைச்சருமான லீ கான்ஜியே இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

சீனத் திபெத்தியல் ஆய்வில், தத்துவப் படிப்பை வலுப்படுத்தி, சரியான அரசியல் திசையைக் கடைப்பிடித்தல், சிட்சாங் தொடர்பான பணிகளுக்குச் சேவையளிப்பதன் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல், சிட்சாங் பற்றி வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் பிரச்சார வழிமுறையின் புத்தாக்கத்தை ஆய்வு செய்தல், திபெத்தியல் ஆய்வின் புத்தாக்க உயிராற்றலை ஊக்குவித்து, இந்த ஆய்வு மேலதிக புதிய வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, லீ கான்ஜியே இக்கூட்டத்தில் முன்வைத்தார்.

சிட்சாங், சிச்சுவான், யுன்னான், கான்சு, ட்சிங்காய் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த தொடர்புடைய பிரிவுகளின் பணியாளர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டில் திபெத்தியல் ஆய்வுத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் முதலியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author