Post Views: 1
சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ராஜரத்தின மைதானத்தில் இன்று காலை 300 காவல்துறையினருக்கு “முதல்வர் பதக்கம்” வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பதக்கத்துடன் முதல்வர் சான்றிதழும் அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், முதல்வர் பதக்கம் அளிக்கப்பட்ட காவலர்களுக்கு வழங்கிய சான்றிதழில் முன்னாள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்து அச்சிடப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கவனக்குறைவு காரணமாக இத்தகைய தவறு நடந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், சான்றிதழ்களை நேரடியாக வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நிகழ்ச்சியில் காவலர்களுக்கு பதக்கங்கள் மட்டும் வழங்கப்பட்டன.
பின்னர் சான்றிதழ்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. பின்னர் முதல்வர் விஜய் விஜய் கைழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட காவலர்களிடம் தனியாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Please follow and like us: