சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தகவலின்படி, 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் சிட்சாங்கின் பொருளாதாரம் சீரான நிலையில் உள்ளது. பிரதேச உற்பத்தியின் மொத்த அளவு, சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை உள்ளிட்ட 8 முக்கிய குறியீடுகளின் அதிகரிப்பு வேகம் நாட்டளவில் முன்னணியில் உள்ளது.
மேலும், இவ்வாண்டின் முற்பாதியில், சிட்சாங்கின் குடிமக்களின் நபர்வாரி செலவழிப்பு வருமானம் 14 ஆயிரத்து 406 யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.8 விழுக்காடு அதிகமாகும்.
தவிரவும், சிட்சாங்கின் பல பொருளாதாரக் குறியீடுகளின் அதிகரிப்பு வேகம் நாட்டின் முன்னணியில் உள்ளது. இதில், மொத்த உற்பத்தி மதிப்பு 15 ஆயிரத்து 555.5 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.3 விழுக்காடு அதிகமாகும்.
