ஆசிய-பசிபிக் செய்தி ஊடக மன்றம்

Estimated read time 1 min read

சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் செய்தி ஊடக மன்றம் 5ஆம் நாள் துவங்கியது. இதன் துவக்க விழாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஆசிய-பசிபிக் பொது சமூகத்தை உருவாக்கும் முக்கிய கருத்து, திறப்பு தன்மை வாய்ந்த ஆசிய-பசிபிக் பொருளாதாரத்தைக் கூட்டாகக் கட்டமைத்து, ஆசிய-பசிபிக் கூட்டுச் செழுமையை முன்னேற்றுவதற்கு முக்கிய வழிக்காட்டலை வழங்கியுள்ளது. ஆசிய பசிபிக் பிரதேசத்தின் வளர்ச்சி ஒத்துழைப்பில், ஆசிய-பசிபிக் செய்தி ஊடகங்களின் ஆக்கப்பூர்வ பங்கு இன்றியமையாத ஒரு பகுதியாகும் என்று இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இவ்வாண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் சீன ஆண்டாகும். பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், தொடர்புடைய கூட்டங்கள் சிறந்த சாதனைகளைப் பெற்று, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு புதிய படியில் நடைபோடுவதை முன்னேறுவது உறுதி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

படம்: VCG

You May Also Like

More From Author