சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிர்லோங் வட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட பின் இதுவரை, இப்பகுதிக்கு மொத்தம் 66 கோடி யுவான் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் 14.7 இலட்சம் மக்கள் இணைய சேவைத் தளங்கள் வழி, பொது அறகொடை திட்டங்களுக்கு வழங்கிய 5 கோடியே ஒரு இலட்சத்து 60 ஆயிரம் யுவான் இடம்பெறுகின்றது.
செப்டெம்பர் 5ஆம் நாள் 11ஆவது சீன அறகொடை தினமாகும். நாட்டின் 14ஆவது ஐந்தாண்டு திட்டம் மேற்கொண்டது முதல் இதுவரை, நாடளவில் மொத்தம் 2000 கோடி யுவான் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இத்தொகை இயற்கைச் சீற்றங்களுக்கான நிவாரணப் பணியைத் தவிர, பல்வேறு வாழ்வாதார துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு செயலாக்கப் பங்கு ஆற்றியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, முதியோர் மற்றும் குழந்தைகள், வறிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாரிகள், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சை, கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அறகொடை அமைப்புகள் ஆண்டுக்கு 15,000 கோடி யுவானுக்கும் மேல் நிதி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
