ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர்கள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதனையொட்டி, அமெரிக்கத் தூதர்களின் வருகை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை முடியும் வரை இரு தரப்பிலும் வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.
இக்காலகட்டத்தில் தங்கள் தரப்பிலிருந்து எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தற்காலிகமாக வான்வழித் தாக்குதல் நிறுத்தப்படுவதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு
