மோகன்லாலின் புதிய படம் ஆபரேஷன் கங்கா அறிவிப்பு; விஷ்ணு மோகன் இயக்கம்  

Estimated read time 1 min read

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் நடிக்கும் 367வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாக L367 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ஆபரேஷன் கங்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கோகுலம் கோபாலன் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

You May Also Like

More From Author