சவுதி அரேபியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம்: டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல்  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியாவுடன் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தி வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்ட அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தங்களில் அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் சேர்க்கப்படும்.
ஆனால், சவுதியுடனான இந்த புதிய ஒப்பந்தத்தில் அத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author