சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 21ம் நாள் மாணிலாவில் ஆசியான் பொதுச் செயலாளர் காவ் கிம் ஹூனுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், சுமுகமான அண்டை நாட்டுறவு கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது. இவ்வாண்டு, தென்கிழக்காசிய நட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். ஆசியான் பொது சமூகக் கட்டுமானம், ஆசியான் ஒன்றிணைப்பு மற்றும் சுயவலிமை ஆகியவற்றுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்
தென் சீனக் கடல், பிராந்திய நாடுகளின் பொது தாயகமாகும். ஃபிலிப்பைன்ஸ் படையின் சில சக்திகளின் ஆத்திரமூட்டல், சீன-ஃபிலிப்பைன்ஸ் உறவின் மேம்பாடு, தென் சீனக் கடல் பரப்பின் அமைதி மற்றும் நிதானம் ஆகியவற்றைச் சீர்குலைக்கும். இதற்கு பிராந்திய நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆசியானுடன் இணைந்து, அமைதி நிதானம் ஒத்துழைப்பு மற்றும் நட்பு தன்மை வாய்ந்த தென் சீனக் கடல் நிலைமையை உருவாக்க சீனா விரும்புகிறது என்றும் வாங்யீ குறிப்பிட்டார்.
