சீனாவுடன் இணைந்து இணையப் பாதுகாப்பு அபாயத்தைச் சமாளிக்க அமெரிக்காவுக்கு அழைப்பு

இணையத்தாக்குதலில் சீனா ஈடுபட்டுள்ளது என்ற அமெரிக்க சட்ட நீதி அமைச்சகம் வெளியிட்ட கூற்றைச் சீனா மறுத்துரைத்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 9ஆம் நாள் கூறுகையில், இணைய வலைபின்னல் குற்றத்துக்கு எதிராக சீனா சட்டப்படி பலம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அதேவேளையில், குறிப்பிட்ட அரசியல் நோக்குடன் தவறான செய்திகளைப் பரப்புவதற்கும் சீனா கண்டிப்பான முறையில் எதிர்க்கின்றது என்றும் தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதை சீனாவும் அமெரிக்காவும் மிகுந்த கவலையுடன் நோக்குகின்றன. அமெரிக்கா தனது இரட்டை வரையறைகளையும் அரசியல் விளையாட்டையும் கைவிட்டு, சீனாவுடன் சரிசம்மான நிலையில் கலந்தாலோசித்து அமைதியான ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிக்கும் இணையச் சூழலை உருவாக்க சீனா அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author