அண்மையில்முடிவடைந்த சீனத் தேசிய தினம் மற்றும் நிலா விடுமுறை குறித்து சர்வதேச செய்தி
ஊடகங்கள் பெரும் கவனம் செலுத்தின. இவ்விடுமுறை காலத்தில் முன்பு கண்டிராத சுற்றுலா
உச்சத்தை சீனா எட்டியுள்ளதாக அமெரிக்காவின் உலகச் சுற்றுலா இதழ் மதிப்பிட்டுள்ளது.
நாட்கள் நீடித்த இவ்விடுமுறைக் காலத்தில் சீனா முழுவதிலும் 243.2கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்
என மதிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறையின் முதல் 4 நாட்களில் முக்கிய சில்லறை விற்பனை
மற்றும் உணவு நிறுவனங்களின் விற்பனைத் தொகை கடந்த ஆண்டை விட, 3.3விழுக்காடு
அதிகரித்துள்ளது. மேலும், 8ஆம் நாள் மாலை 4
:00 மணி வரை, சீனத் திரைப்படங்களின் மொத்த வசூல்
180கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
மேலும், இவ்விடுமுறை காலத்தில், சீனாவின்
குடிவரவு மற்றும் குடியகல்வு மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு சராசரியாக
20லட்சத்தை எட்டியுள்ளது. உயர்ந்து வரும் சீன நுகர்வோரின் நம்பிக்கை மற்றும்
சுற்றுலா உச்ச நிலையானது எதிர்கால சுற்றுலா தொழில் தொடர்ந்து சீராக வளர்வதற்கான
அறிகுறியாகும். சீனப் பொருளாதாரத்தின் வலுவான நெகழ்ச்சியையும் இது காட்டியுள்ளது.
இந்நிலையில், உலக நிதிச் சந்தை சீனாவின் மீது
மேலும் கவனம் செலுத்தி வருவதால், சீனாவில் மேலதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகால வாய்ப்புகளை உலகம் சீனாவின்
இவ்விடுமுறை மூலம் கண்டுபிடித்துள்ளது. மாபெரும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்
சீனாவின் பலதரப்பட்ட சந்தை உலகளாவிய
நிலையிலும் அரிதானது என்பதால் அதைத் தவறவிட கூடாது என்று பல நாடு கடந்த
நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.