சீனாவில் வெளியிடப்பட்ட பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவதற்கான கொள்கைக்கு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் செய்தி ஊடகங்களும் அண்மையில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன.
சீனப் பொருளாதாரத்தை புதிய உச்சத்தைக் கொண்டு செல்ல இக்கொள்கை உதவும் என்றும், சிறந்த முதலீட்டு சந்தையான சீனாவின் ஈர்ப்பு ஆற்றல் உயர்ந்து வருவதாகவும் கருதப்படுகின்றன.
சீன அதிகார வட்டாரம் அக்டோபர் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 94 லட்சத்து 97 ஆயிரத்து 460 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகமாகும்.
இத்தகைய பொருளாதார அதிகரிப்பு விகிதத்தைப் பெறுவது எளிது அல்ல. இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து, ஒட்டுமொத்த சூழ்நிலை சிக்கலாக இருந்து, வெளிப்புற நிர்ப்பந்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு, கட்டமைப்பு சீர்திருத்தத்தின் முக்கிய காலக் கட்டத்தில் சீனப் பொருளாதாரம் இருக்கிறது.
ஆனால் சீனப் பொருளாதாரம் அழுத்தத்தைத் தாங்கி, முக்கிய பொருளாதார குறியீடுகளில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனப் பொருளாதாரம் சீரான செயல்பாட்டுப் போக்கினை நிலைநிறுத்தி, வலுவான உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.
சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், சீனாவில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், ஷென்ட்சென் நகரில் உள்ள அமெரிக்காவின் ஆப்பிள் கூட்டு நிறுவனத்தின் ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் திங்கள், சீன சந்தையை நோக்கிய தன் தொழில் சின்ன வரலாற்றில் மிக பெரிய அளவிலான உற்பத்தி பொருட்களின் வடிவமைப்பை உருவாக்கும் என்று ஜெர்மனியின் Audi நிறுவனம் அறிவித்தது. ஆழமான முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மூலம், சீனச் சந்தையை பன்னாடுகள் கூட்டாக பகிர்ந்து கொள்ளும் பெரிய சந்தையாக மாறச் செய்ய வேண்டும் என்று இந்நிறுவனங்கள் கருதுகின்றன.
வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரை, சீனா பெரிய சந்தையாக மட்டுமல்லாமல், முன்னணியில் உள்ள புத்தாக்கத்திற்கான பெரிய அரங்குமாகும். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு இவ்வாண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் புத்தாக்கக் குறியீடு, வரிசையில் ஒரு இடம் உயர்ந்து, 11ஆவது இடத்தை வகிக்கிறது. சீனப் பொருளாதாரத்திற்கான மதிப்பீடு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் “சீனாவில் செயல்படுவதற்கு” இயக்காற்றலை வழங்கியுள்ளது. பொருளாதார அதிகரிப்பும் வெளிநாட்டுத் திறப்பும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
சீனாவில் வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதுடன், சீனாவில் முதலீடு செய்து, நலனைப் பெறுவதற்கான மேலதிக புதிய வாய்ப்புகளை வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் வரவேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.