“மிகை உற்பத்தி திறன்” பிரச்சாரத்துக்கு நியாயமில்லை

வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் பொருளாதாரங்களின் உற்பத்தித் திறன் பயன்பாட்டு விகிதத்தின் நடுமதிப்பு பெரும்பாலும் 75 முதல் 80 விழுக்காடு வரை இருக்கும். இந்நிலையில் உலகின் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவில் 2025ம் ஆண்டில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் பயன்பாட்டு விகிதம் 74.4 விழுக்காட்டை எட்டி, நியாயமான வரம்புக்குள் உள்ளதாகத் தொடர்புடைய நிறுவனங்களின் தரவுகள் காட்டுகின்றன.

சில நாடுகள், புவிசார் அரசியல் மற்றும் வர்த்தகப் பாதுகாப்பு முதலிய நோக்கங்களால், மிகை உற்பத்தித் திறன் என்பதற்கு எளிய முறையில் விளக்கம் கொடுத்து, சீன வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், சர்வதேச இயல்பான வர்த்தக ஒத்துழைப்புக்குத் தடை போடவும் முயன்று வருகின்றன. இது குறித்து, சீன வணிக அமைச்சகம் 28ம் நாள் “மிகை உற்பத்தி திறன்”பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணத்தை வெளியிட்டு, கூறப்படும் மிகை உற்பத்தி திறன் பிரச்சினையை வெவ்வேறான கோணங்களிலிருந்து தெளிவுப்படுத்தியுள்ளது. தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் சர்வதேச ஒத்துழைப்பையும், உலகின் பொருளாதார வர்த்தகத்தில் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதையும் முன்னெடுப்பதில், சீனாவின் நடைமுறைகள் மற்றும் முயற்சிகள் இந்த ஆவணத்தில் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

தொழில் மானியத்தாலேயே மிகை உற்பத்தித் திறன் ஏற்பட்டுள்ளது என்ற தவறான கூற்று குறித்து, மானியமானது பிரச்சினை அல்ல. திறந்த, நியாயமான மற்றும் விதிமுறை சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படையில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகை உற்பத்தித் திறன், சந்தை சார்ந்த பொருளாதாரத்தில் மாறி வரும் நிலைமையாகும். குறிப்பிட்ட சில நாடுகள், பொருளாதார விதிகளுக்கிணங்க, இப்பிரச்சினையைப் புறநிலையாக அணுக வேண்டும். அதைவிடுத்து பொறுப்பைச் சீனாவின் மீது சுமத்துவதனால்,  தங்களின் சொந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

You May Also Like

More From Author