சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உயர்நிலை பேச்சுவார்த்தை உள்ளூர் நேரப்படி மே 10ஆம் நாள் முற்பகல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் துவங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.