லாங் மார்ச்-7ஏ ஏவுகணை மூலம், தியான்லியன் 3-01 செயற்கைக்கோள் 29ஆம் நாள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.
வென்ச்சாங் விண்கல ஏவுதளம் கட்டமைக்கப்பட்டது முதல் ஏவப்பட்ட 50வது ஏவுதல் பணி இதுவாகும். இந்த ஏவுதளம், சீனா சுயமாக வடிவமைத்து கட்டியமைத்த முதலாவது பசுமையான நவீன விண்வெளி ஏவுதளமாகும். இது தற்போது பல ஏவு திசைகளில் அனைத்து வானிலைச் செயல்பாடுகளையும் அதிக எடைத் திறனையும் கொண்ட மூன்று ஏவுதல் அமைப்புகளையும் கொண்டுள்ளது.
