சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 6ஆம் நாள் பெய்ஜிங்கில், பான்சென் லாமா எர்டேனி நோர்பின் வணங்குதலை ஏற்றுக்கொண்டார்.
10ஆவது பான்சென் லாமாவை மாதிரியாக கொண்டு, பௌத்த மதத்தின் அறிவைப் பெருமளவாக அறிந்து கொண்டு, துறவிகளுக்கும் விசுவாசிகளுக்கும் பிடித்த பான்சென் லாமாவாக மாற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் அவருக்கு ஊக்கமளித்தார்.
சிசாங் மரபுவழி புத்தமதத்தையும் தேசத்தையும் நேசிக்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து, கையேற்றி தேசிய ஒன்றிணைப்புக்கு பான்சென் லாமா எர்டேனி நோர்பு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.