சீன பெட்ரோ தாரிம் எண்ணெய் வயல் 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், இது வரை அதன் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 50 ஆயிரம் கோடி கன மீட்டருக்கு மேலாகும். இது, நாட்டின் எரியாற்றல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து, எரியாற்றல் கட்டமைப்பின் மேம்பாட்டையும் பசுமையான, கரி குறைந்த வளர்ச்சியையும் விரைவுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
தாரிம் எண்ணெய் வயல், இயற்கை எரிவாயுவை நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்புவது என்ற திட்டப்பணியின் முக்கிய வினியோக தளமாகவும், சீனாவின் மிக பெரிய, மிக ஆழ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி தளமாகவும் விளங்குகிறது. சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதி, இயற்கை எரிவாயுவை மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்பும் திட்டப்பணியின் நெடுகிலுள்ள 15 மாநிலங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றில் மக்களின் வாழ்வாதார இயற்கை எரிவாயுவை இது வினியோகம் செய்கிறது.
