சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் 7ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவின் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து, உள்நாட்டு மற்றும் வெளியுறவு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 2025ஆம் ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்பு மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது நிறைவு ஆண்டைச் சீனா நிறைவுகூடும். இவ்வாண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு முதலிய முக்கிய நடவடிக்கைகளை சீனா நடத்தும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெளிநாடுகளுக்குப் பல முக்கிய அரசு முறை பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
சீனாவின் தூதாண்மையானது வரலாற்றின் சரியான பக்கத்திலும் மனிதகுல முன்னேற்றத்துக்கான பக்கத்திலும் உறுதியாக நிற்கும். சீனாவின் உறுதித் தன்மையால் உறுதியற்ற உலகை நாம் நிலைப்படுத்தும் என்றார்.
தெற்குலக நாடுகளின் வளர்ச்சி இந்த சகாப்தத்தின் மிகவும் தனிச்சிறப்பான அடையாளமாகும். உலக அமைதியைப் பேணிக்காத்து, உலக வளர்ச்சியைக் கொண்டுவந்து, உலகக் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் முக்கியச் சக்தியாக தெற்குலக நாடுகள் மாறிள்ளன என்று வாங் யீ தெரிவித்தார்.
வாங்யீ மேலும் கூறுகையில், தற்போதைய உலகின் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவுக்கும் மிகப் பெரிய வளர்ந்த நாடான அமெரிக்காவுக்கும் இடையே பரந்துபட்ட பொது நலன்களும் ஒத்துழைப்பு வாய்ப்புகளும் உண்டு. இரு நாடுகளும் கூட்டாளிகளாக நடந்து கொள்ள முடியும்.
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு சமமானதாகும். ஒத்துழைப்பின் வழியில் பயணித்தால் ஒன்றுக்கொன்று நலன் தரும் கூட்டு வெற்றியை நனவாக்க முடியும். மாறாக நிர்ப்பந்தத்தைத் திணித்தால் சீனா அதனை உறுதியாக எதிர்க்கும் என்றார்.
சீன-ரஷிய உறவு, உக்ரைன் நெருக்கடி, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் உள்ளிட்டவை பற்றியும் வாங்யீ சீனாவின் நிலைப்பாட்டை விவரித்தார்.