ஏர் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, அவர்களின் மாதிரிகள் இறுதி மற்றும் விரிவான ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்க வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பூக்கெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா (AI2379) விமானம் நடுவானில் பறந்தபோது, திடீரென 300 அடி உயரத்திலிருந்து கீழே சரிந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அப்போதைய முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தின் எதிரொலியாகவே அனைத்து விமானிகளுக்கும் இத்தகைய சோதனையை ஏர் இந்தியா கட்டாயமாக்கியது.
ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை: தொடர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
