டெல்லி-மான்செஸ்டர் இண்டிகோ விமானம் 7 மணி நேரத்திற்குப் பிறகு யு-டர்ன்  

Estimated read time 1 min read

டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், சுமார் 7 மணி நேரம் பறந்த நிலையில், ஈரான் போர் சூழல் காரணமாகப் பாதி வழியில் மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்காக நார்ஸ் நிறுவனம் இயக்கிய 6E33 என்ற விமானம், திங்கட்கிழமை (மார்ச் 9) அதிகாலை டெல்லியிலிருந்து புறப்பட்டது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தவிர்க்க, இந்த விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து, ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதி வழியாகச் சென்றது.
சுமார் 7 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, எத்தியோப்பியா – எரித்திரியா எல்லைக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீர் வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விமானம் மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது.

You May Also Like

More From Author