உலகம்:
பிரேசிலின் அமேசான் பகுதியில் கடந்த ஜுலையில் மட்டும் மொத்தம் 11ஆயிரத்து 434 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இது, கடந்த ஆண்டை விட 98 விழுக்காடு அதிகம். அத்துடன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்ச நிலையை எட்டியுள்ளது. ஜுலை 30ஆம் நாள், 1,348 தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக, அந்நாட்டின் தேசி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.
அமேசான் பகுதியில் அடிக்கடி நிகழ்ந்த தீ விபத்துக்கள், வறட்சியுடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது. பிரேசில் மத்திய அரசின் முன்மதிப்பீட்டின்படி, இவ்வாண்டு அமேசான் மாநிலத்தில் வறட்சி நிலை கடந்த ஆண்டை விட மேலும் மோசமாக இருக்கும். இது, வரலாற்றில் மிக மோசமான வறட்சியாக இருக்க சாத்தியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.