விழுப்புரத்தில் 12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.
விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்த நிலையில், செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 12 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
நிர்வாகத் திறனற்ற அதிகாரிகளால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.