சீனத் தலைமை அமைச்சர் லீ சியாங் அண்மையில் அரசவை உத்தரவில் கையெழுத்திட்டு, ஒருங்கிணை மின் சுற்று அமைப்பின் வடிவமைப்பு பாதுகாப்புக்கான திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டார். இவ்விதிகள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஒருங்கிணை மின் சுற்று அமைப்பின் வடிவமைப்புக்கான தனி முழு உரிமையை பாதுகாத்து, குறிப்பிட்ட தொழில்நுட்ப புத்தாக்கத்தை ஊக்குவித்து, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவது இவ்விதிகளின் நோக்கமாகும்.
ஒருங்கிணை மின் சுற்று அமைப்பின் வடிவமைப்பு பாதுகாப்புப் பணி, கட்சி மற்றும் அரசின் அறிவு சார் சொத்துரிமைக்கான உத்திநோக்கு ஏற்பாட்டை செயல்படுத்தி, பாதுகாப்பு வரம்பை விரிவாக்குவதோடு, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த கோரிக்கை இவ்விதிகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்ணபம் மற்றும் பரிசோதனை நடைமுறைகளை முழுமைப்படுத்துவது, தனி முழு உரிமை பாதுகாப்பை வலுப்படுத்துவது, வடிவமைப்பின் பயன்பாட்டை மேம்படுத்துவது ஆகிய கோரிக்கைகளும் இவ்விதிகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.
