2026ஆம் ஆண்டு நாட்டின் முதல் 500 தனியார் நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

2026ஆம் ஆண்டு நாட்டின் முதல் 500 தனியார் நிறுவனங்களின் பட்டியலை அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனம் செப்டம்பர் 22ஆம் நாள் தியான்ஜின் மாநகரில் வெளியிட்டது.

இப்பட்டியலின்படி, ஜேடி, அலிபாபா (சீனா), ஹெங்லி ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களை வகித்துள்ளன.

இவ்வாண்டு, அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனம், 28வது பெரிய அளவிலான தனியார் நிறுவனங்களுக்கான கணக்கெடுப்பை நடத்தியது. 2025ஆம் ஆண்டு 100 கோடி யுவானுக்கு அதிகமான வருமானம் கொண்ட 6350 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்தன. வருமானம் அடிப்படையில் முதல் 500 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இக்கணக்கெடுப்பின்படி, முதல் 500 நிறுவனங்களின் மொத்த வருமானம் 44 லட்சத்து 93 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 4.35 விழுக்காடு அதிகமாகும். இவற்றின் நிகர லாபம் 1 லட்சத்து 83 ஆயிரம் கோடி யுவானாகும்.

You May Also Like

More From Author