8ஆவது ஏபெக் மனிதவள மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டம் 21ஆம் நாள், சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் நான்ஜிங் நகரில் நடைபெற்றது.
ஏபெக் அமைப்பின் நாடுகள், செயலகம், பார்வையாளர் நாடுகள் மற்றும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் சுமார் 150 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
புதிய கொள்கையின் நடைமுறையாக்கம் மற்றும் முன்மாதிரிகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர். தவிரவும், மனிதவள மேம்பாட்டிற்கான புதிய அறைகூவல்களைச் சமாளிக்கும் ஒத்துழைப்புகளும் அவர்கள் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.
இக்கூட்டம், ஏபெக் கட்டுக்கோப்புக்குள் முக்கிய அமைச்சர்கள் நிலை கூட்டங்களில் ஒன்றாகும்.
8ஆவது ஏபெக் மனிதவள மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கான நான்ஜிங் அறிக்கை இதில் வெளியிடப்பட்டது.
