ஐ.நா பேரவையின் பொது விவாதத்தில் கலந்து கொள்வது ஹான்சேங்

சீனாவின் துணை அரசுத் தலைவர் ஹான்சேங் செப்டம்பர் 24 முதல் 26ஆம் நாள் நியூயார்கில் சென்று, ஐ.நா பேரவையின் 81ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இக்காலத்தில், சீனா நடத்திய உலக வளர்ச்சி முன்னொழிவின் 5ஆவது ஆண்டு நிறைவுக்கான உயர்நிலைப் பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொண்டு, ஐ.நா பொதுச் செயலாளர், ஐ.நா பேரவையின் 81ஆவது கூட்டத் தொடரின் தலைவர் மற்றும் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேசுவார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 22ஆம் நாள் தெரிவித்தார்.

You May Also Like

More From Author