சீனாவின் முதலாவது விளைநிலப் பாதுகாப்புச் சட்டம் அடுத்தாண்டில் அமல்

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 22ஆம் நாள் முற்பகல், சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கம் எனும் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இயற்கை மூலவளத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவது தொடர்பான தகவல்கள் இதில் வெளியிடப்பட்டன.

தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் இதில் கூறுகையில், சீன மக்கள் குடியரசின் விளைநிலப் பாதுகாப்பு மற்றும் தரத்தின் மேம்பாடு பற்றிய சட்டம், அடுத்தாண்டில் ஜனவரி முதல் நாள் அமல்படுத்தப்பட உள்ளது. விளைநில பாதுகாப்புத் துறையில் சீனாவின் முதலாவது சட்டம் இதுவாகும் என்றார். மேலும், இச்சட்டத்தின் நடைமுறையாக்கத்துக்காக, விளைநிலங்களின் அளவை நிதானப்படுத்துவது, கட்டமைப்பை மேம்படுத்துவது, கண்காணிப்பை வலுப்படுத்துவது ஆகிய 3 துறைகளில் சீனா பெரும் முயற்சியுடன் ஈடுபடும் என்று சீனத் தேசிய இயற்கை மூலவள அமைச்சகம் தெரிவித்தது.

You May Also Like

More From Author