கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கான வட்டி, ஆண்டுக்கு அதிகபட்சமாக, 8.25 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதனுடன் சேர்த்து கூடுதலாக, 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனகூட்டுறவுத் துறை தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.25 சதவீத வட்டி வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. மேலும், நகை கடனுக்கான நிதி அளவீடாக ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 அல்லது சந்தை மதிப்பில் 75 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை தெரிவிக்கபட்டுள்ளது.
