அரசின் மீது ஜப்பான் பொது மக்களின் குற்றஞ்சாட்டு

அணு ஆயுதங்களை வைத்திருக்காமை, தயாரிக்காமை மற்றும் நாட்டிற்குள் கொண்டுவராமை ஆகிய மூன்று கொள்கைகளையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும்  போதியளவில் விவாதம் செய்யாத நிலையில், திருத்த பாடுபடுகின்றது என ஜப்பான் அரசின் மீது அணு குண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் சம்மேளனம் 10ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குற்றஞ்சாட்டியது. அமைதியான அரசியல் அமைப்பு சட்டத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பானின் செய்தி ஊடகங்கள் முன்பு வெளியிட்ட தரவுகளின் படி, இவ்வாண்டின் இறுதியில், ஜப்பானின் தேசிய பாதுகாப்பு பணி பற்றிய 3 ஆவணங்களைத் திருத்தும் போது, அணு ஆயுதம் பற்றிய 3 கொள்கைகளிலுள்ள ஜப்பானுக்குள் அணு ஆயுதங்களை கொண்டு வராமை என்ற கோட்பாட்டை மாற்ற சனாயே டகாயிச்சி அரசு முயற்சி செய்து வருகின்றது.

You May Also Like

More From Author