நெருக்கடியில் சிக்கியுள்ள நேபாளத்துக்குத் தாராளமாக உதவிகளை வழங்கும் சீனாவுக்கு நேபாள அரசு உளமார்ந்த நன்றி தெரிவிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் செப்டம்பர் 3ஆம் நாள் நேபாளத்துக்கான சீனத் தூதர் சாங் மாவ்மின்னைச் சந்தித்துப் பேசிய போது கூறினார்.
நேபாளமும் சீனாவும் இமயமலையின் இயற்கை சூழலமைப்பைப் பகிர்ந்து கொண்டு, காலநிலை மாற்றத்தல் பாதிக்கப்படுகின்றன என்றும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பு என்ற சீனாவின் கருத்தை நேபாளம் ஒப்பு கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சீனா உட்பட எந்த குறிப்பிட்ட நாட்டிலிருந்து காலநிலை நிதி இழப்பீட்டை தனித்தனியாக கோருவதை நேபாளம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் கட்டுக்கோப்பு ஒப்பந்தம், பாரிஸ் உடன்படிக்கை ஆகியவற்றின் கீழ் சர்வதேச சமூகத்திலிருந்து இழப்பீட்டை கோரும் என்றும் தெரிவித்தார்.
