ஜெனீவாவில் படைகலக்குறைப்பு குறித்த பேச்சுவார்த்தைக் கூட்டம் 11ஆம் நாள் நடைபெற்றது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறப்படும் எறிவிசை ஏவுகணை ஏவுதல் குறித்து கூட்டு கருத்துக்களை வெளியிட்டன. எறிவிசை ஏவுகணை ஏவுதல் பற்றிய ஜூலை திங்களில் சீனா மேற்கொண்ட சோதனையின் மீது அந்த நாடுகள் குற்றச்சாட்டின.
இது குறித்து, அமெரிக்கப் பிரதிநிதி வெளியிட்ட தவறான கருத்துக்களை சீன படைகலக்குறைப்பு விவகாரத் தூதர் லீ ஷ்ஜியாங் 11ஆம் நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடுமையாக மறுத்துரைத்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
சீனாவின் நியாயமான சரியான தேசியப் பாதுகாப்புக்கான நவீனமயமானக் கட்டுமானம் மீது சந்தேகப்படுத்தப்பட முடியாது. எறிவிசை ஏவுகணை ஏவுதல் குறித்து சீனா முன்கூட்டியே வெளிப்படையாக அறிவித்துள்ளது. சீனாவின் இந்நல்ல நடத்தை, புவிசார் அரசியல் சூழ்ச்சியில் சேர்க்கப்பட முடியாது. இப்பேச்சுவார்த்தைக் கூட்டத்தின் மூலம், குறிப்பிட்ட நாடுகள் அரசியல் ரீதியில் தங்களின் உள் நோக்கத்தை நனவாக்குவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.
