ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது சீனா

பசிபிக் தீவுகள் மன்றத்தின் செயலாளரகம் ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று சீனா மீண்டும் வற்புறுத்தியுள்ளது.

பசிபிக் தீவுகள் மன்றத் தலைவர்கள் கூட்டத்தில் தைவான் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக இவ்வமைப்பின் அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கோச்சியாகுன் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் சீனாவின் தைவான் மாநிலம் கலந்து கொள்வதில் சீன அரசின் கொள்கை தெளிவானதாகவும் உறுதியாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

பசிபிக் தீவுகள் மன்றத்தின் செயலாளரகம் சீனத் தைவான் தொடர்பான பிரச்சினையைச் சரியாகக் கையாண்டு, சீனாவுக்கும் இவ்வமைப்புக்கும் இடையிலான உறவின் சீரான நிதானமான வளர்ச்சியை பாதிக்காமல் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author