பெய்ஜிங்கிலிருந்து மங்கோலியா நாட்டின் தலைநகர் உலான்பாதருக்கு வரையிலான ஏர் சைனா விமான சேவையை, சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த சி919 விமானம் ஆகஸ்ட் 12ஆம் நாள் முதல் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நிரந்தர வணிக பயண சேவைகளை சீனா தயாரிக்கும் விமானம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது என்பதை இது வெளிக்காட்டுகிறது.
இதற்கு முன்பு, வெளிநாடுகளில் நடைபெற்ற விமான பொருட்காட்சிகளில் சி919 விமானம் பலமுறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமான பொருட்காட்சியில் இரு முறையாகவும் துபாய் விமான பொருட்காட்சியில் ஒரு முறையாகவும் இவ்விமானம் பங்கேற்றுள்ளது.
