சீன பொருளாதார நிலைமை, இவ்வாண்டின் பிற்பாதியில் பொருளாதாரப் பணிகள் ஆகியவை குறித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, ஜுலை 23ம் நாள் கட்சி சார்பற்ற பிரமுகர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது. ஜனநாயகக் கட்சி கமிட்டி, தேசிய தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாராத பிரமுகர்கள் முதலியோரின் கருத்துக்களும் முன்மொழிவுகளும் கேட்டறியப்பட்டன.
இக்கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில், இவ்வாண்டு பிற்பாதியில் பொருளாதாரப் பணிகளைப் புரியும் போது, புதிய வளர்ச்சி சிந்தனையை முழுமையாக நடைமுறைப்படுத்தி, புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்கி, கொள்கைகளின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையை நிலைநிறுத்த வேண்டும். வேலை வாய்ப்பு, தொழில் நிறுவனம், சந்தை முதலிய துறைகளின் வளர்ச்சியை முன்னெடுத்து, 14வது ஐந்தாண்டு திட்டத்தை இனிதே நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.