இந்தியாவில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டுப் போரால் இந்தியாவில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2006 முதல் 2009 வரை உரிய ஆவணங்களின்றி வெளியேறியவர்கள், இலங்கைத் தூதரகம் மூலம் இலங்கை உளவுத்துறையிடம் ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டும். கொலை, தேசத்துரோகம் போன்ற குற்றங்களில் தொடர்பு இல்லை என்பது உறுதியானால் அனுமதிக்கப்படுவர். ஒருவேளை தீவிரக் குற்றங்களில் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்கள் எல்லையிலேயே கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா அகதிகள் முகமை மூலம் திரும்புவோருக்குக் குடியுரிமைத் தளர்வுகள் வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
