ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 53.29 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 160.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து அதிகாலை 12.38 மணியளவில் (10 நிமிடம் இடைவேலியில்) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடுத்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அரிய மண் தாதுக்கள் உள்ளிட்டபொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கை, சீனா சட்டத்தின்படி ஏற்றுமதி மேலாண்மை அமைப்பு முறையை மேம்படுத்தி மேற்கொள்ளும் நியாயமான செயலாகும் என்றும், [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மக்கள் [மேலும்…]
ஆந்திர மாநிலம் கலவை குண்டா அணை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரக்கூடிய தொடர் மழை காரணமாக அணையிலிருந்து அதிகப்படியான [மேலும்…]
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன், எரிவாயு [மேலும்…]