அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டமான Kuiper, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சேவைகளை வழங்கத் தயாராகி வருகிறது.
குய்பர் திட்டத்திற்கான அரசாங்க தீர்வுகளின் தலைவர் ரிக்கி ஃப்ரீமேன், பாரிஸில் நடந்த உலக விண்வெளி வணிக வார நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அமேசான் 200க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை குறைந்த பூமி சுற்றுப்பாதையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமேசானின் Project Kuiper 2026ஆம் ஆண்டுக்குள் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க உள்ளது
