ரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது!

Estimated read time 1 min read

இந்தியர்களின் முக்கிய சேமிப்பு மற்றும் மதிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது தங்கம். அதனாலேயே ஏழை, எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் தங்கம் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம்.

அந்த வகையில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவிருக்கின்றன. இதனை முன்னிட்டு பலர் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சந்தை நிலவரம் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றம் போன்றவை தங்கம் விலை தாக்கத்தை ஏற்படுத்துவதால் தினந்தோறும் விலை மாறிக்கொண்டே இருக்கிறது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 28) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,880 குறைந்து, ரூ.1,10,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

You May Also Like

More From Author