இந்த 5 ராசிகளுக்கு பணம் முதல் காதல் வரை ஜோதிடக் கணிப்பு…!! 

Estimated read time 1 min read

ஜோதிட நம்பிக்கையின்படி, சுக்கிரன் செல்வம், காதல், அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கையுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறார். தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரித்து வருகிறார். இந்தப் பெயர்ச்சி 2026 நவம்பர் 6-ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் கன்னி, துலாம், கும்பம், மகரம், தனுசு ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு பணம், தொழில் மற்றும் உறவுகள் தொடர்பாகச் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் மற்றும் செலவுகளைச் சமநிலைப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கலாம். நீண்ட நாட்களாகத் தாமதமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும், வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காதல் உறவுகளில் இருந்துவரும் பிரச்னைகள் குறைந்து, புரிதல் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

துலாம், கும்பம்: சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகலாம். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான மன அழுத்தம் குறையலாம் என்றும், தொழிலில் புதிய முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கலாம்.

மகரம், தனுசு: மகர ராசிக்காரர்கள் புதிய தொழில் அல்லது திட்டங்களைத் தொடங்குவதற்கு ஏற்ற காலமாக இது அமையலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தாமதமாகிவந்த பணிகள் வேகமெடுக்கவும், பொருளாதார நிலை மேம்படவும் வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கலாம் என்றும், ஏற்கெனவே செய்த முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளிலும் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான கணிப்புகளே தவிர, உறுதியான பலன்களாகக் கருத முடியாது.

You May Also Like

More From Author