சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்கப் பயணம் பற்றி வாங்யீ விளக்கம்

 How

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 23 முதல் 25ஆம் நாள் வரை அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அவரின் இந்தப் பயணம் பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் மீண்டும் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அத்துடன், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் 6 மாதங்களுக்குள் பரஸ்பர பயணம் மேற்கொண்டனர். இது சீன-அமெரிக்கத் தொடர்பு வரலாற்றில் புதிய சாதனையாகும். இப்பயணத்தில் செழுமையான உள்ளடக்கங்கள் உள்ளன. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பும், ஒன்றுக்கொன்று மதிப்பு என்ற நட்பார்ந்த சூழ்நிலையில், சீன-அமெரிக்க உறவு மற்றும் உலக நிலைமையுடன் தொடர்புடைய நெடுநோக்கு தன்மையுடைய ஒட்டுமொத்த விவகாரங்கள் குறித்து மனமார்ந்த முறையில் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்றார்.

மேலும், மாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்த சர்வதேச நிலைமையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பெய்ஜிங் சந்திப்பின் நேர்மறையான விளைவை இப்பயணம் தொடர்ச்செய்து, சீன-அமெரிக்க இடையேயான ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு சார்ந்த நிலையான உறவுகள் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்கு வழிக்காட்டியதோடு, சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு, சமாதான சக வாழ்வு மேற்கொண்டு, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான சமிக்கையை வெளிப்படுத்தி, இரு நாடுகளுக்கும் உலகத்துக்கும் நன்மை புரியும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.

You May Also Like

More From Author