சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களுடன் செப்டம்பர் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார். தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, சீன-அமெரிக்க உறவின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்து, இரு தரப்பினரும் மனமார்ந்த மற்றும் ஆழ்ந்த முறையில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது வாங்யீ கூறுகையில், அமெரிக்கத் தரப்பு, சீனா பற்றி சரியாக அறிந்து கொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமைகளைத் தன்னடக்கத்துடன் கையாண்டு, ஒத்துழைப்புகளை ஆக்கமுடன் மேற்கொண்டு, இரு நாட்டுறவின் நிதானமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்தப் பயணம் துணைப் புரியும் என்று விருப்பம் தெரிவித்தார்.
மேலும், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக திகழ்கின்றன. எதிரிகள் அல்ல. இரு நாடுகள் பரிமாற்றம் மற்றும் தொடர்பை வலுப்படுத்தி, தப்பெண்ணங்கள் மற்றும் பகைமைகளைத் தவிர்த்து, பரஸ்பர ஒத்துழைப்புகளை முன்னேற்றி, பெரிய நாடுகளின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.